மருதாநதி அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

அய்யம்பாளையம் மருதாநதி அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2021-09-03 16:23 GMT
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து மகன் சரண் (வயது 18). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று நண்பர்களுடன் அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு குளிப்பதற்காக சென்றார். அப்போது அவர் அணையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார். 
இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் விவேகானந்தன், நிலைய போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி சரணின் உடலை மீட்டனர். 
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்