உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
உடுமலை,
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அரசு கலைக்கல்லூரி
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்திவருகிறது.
தற்போதுகொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அரசின் உத்தரவுப்படி, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
நேரடி வகுப்புகள்
அதன்படி உடுமலை அரசு கலைக்கல்லூரி கடந்த1-ம்தேதி திறக்கப்பட்டது. இதில் இளலை பட்டப்படிப்பு படிக்கும் 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், 3-ம்ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் கல்லூரிக்கு வருவார்கள். அவர்களுக்கு கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
சுழற்சி முறையில் கல்லூரிக்கு வரும் இவர்களுக்கு, கல்லூரிக்கு வராத நாட்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் முதுநிலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதன்படி, கல்லூரிக்கு வந்து கொண்டுள்ள அந்த மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் கல்லூரி திறக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்கொரோனா தடுப்பூசிபோட்டிருக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதில் பேராசிரியர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கல்லூரியில் நடைபெறும் நேரடி வகுப்புகளுக்கு வந்து கொண்டுள்ளபலமாணவ, மாணவிகளும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக்கூறப்படுகிறது.
225 மாணவ-மாணவிகளுக்கு
இந்தநிலையில் இதுவரை கொரனாதடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முகாம் நேற்று அரசுகலைக்கல்லூரி வளாகத்தில், கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி முன்னிலையில் நடந்தது. உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
மொத்தம் 225 மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் வரிசையாக நின்று சென்று தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவ, மாணவிகள் அதற்கான சான்றிதழை கல்லூரியில் காட்ட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.