செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 103 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-09-03 08:13 GMT
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்து 432 பேர் உயிரிழந்துள்ளனர். 1,065 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்ட மாவட்டத்தில் 1,231 பேர் உயிரிழந்துள்ளனர். 367 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்