வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
வத்தலக்குண்டுவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முருகன் தீர்மான அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தலா ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்வதாகவும், அதில் 40 சதவீதம் கட்டிட பணிகளுக்கும், 60 சதவீதம் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயகர், அறிவி, சக்திவேல், ஜீவகன், செல்லம்மாள், பெனினா தேவி, முருக பாரதி, சூசைரெஜி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் மகாராஜன் நன்றி கூறினார்.