அறிவியல் பாட செய்முறை பயிற்சி; 6-ந் தேதி தொடங்குகிறது

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2021-09-02 20:00 GMT
நெல்லை:
இந்த மாதம் நடைபெற உள்ள இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் தனித்தேர்வர்களுக்கான தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சி நடைபெற உள்ளது. பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் நெல்லை கல்வி மாவட்டம் மாணவர்களுக்கும், பாளையங்கோட்டை மேரிசார்ஜெண்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நெல்லை கல்வி மாவட்ட மாணவிகளுக்கும் வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
தனித்தேர்வர்கள் தங்களிடமுள்ள ஒப்புகை சீட்டினை செய்முறை தேர்வு மைய தலைமை ஆசிரியரிடம் காண்பித்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை, நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ரேணுகா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்