மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசநகர் தெருவை சேர்ந்தவர் சரண்குமார்(வயது 30). இவர் தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர், வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் ேமாட்டார் சைக்கிள் கிடைக்காததால், இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சரண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து சற்று தூரம் கொண்டு கொண்டு, பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளுடன் அங்கிருந்து சென்றது, தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.