பனைக்குளம்,
உச்சிப்புளி அருகே உள்ள துத்திவலசை பகுதியை சேர்ந்தவர் தம்பித்தேவன். இவரது மகன் நாகராஜ் (வயது60). உச்சிப் புளியில் இவர் பழக்கடை நடத்தி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் உச்சிப்புளியில் இருந்து அப்பகுதியில் உள்ள தோப்பிற்கு சென்றார். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்றபோது கோயமுத்தூரில் இருந்து வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அ நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த உச்சிப்புளி போலீ சார் உடலை கைப்பற்றி கோயம்புத்தூர் பண்ணிமடை தர்ம ராஜா நகரை சேர்ந்த துரைசாமி மகன் நாகராஜன் (41) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.