திண்டிவனம் அருகே பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: டிரைவா் கைது

திண்டிவனம் அருகே பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர டிரைவா் கைது செய்யப்பட்டாா்.

Update: 2021-09-02 16:36 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை 7-வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மகன் மணிகண்டன் (வயது 25). பொக்லைன் டிரைவரான இவருக்கும் திண்டிவனம் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும், 12 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மணிகண்டன், அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டில் இருந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று ஊரல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து, மாணவியை மீட்டனர். 12 வயது சிறுமியை பொக்லைன் டிரைவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்