வாலிபர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது

வாலிபர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-02 16:27 GMT
வில்லியனூர், செப்
வாலிபர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வில்லியனூரை அடுத்த சிவராந்தகம் ஏரிக்கரை பகுதியில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு கும்பலாக இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். 
அவர்களில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில், அவர்கள் வழுதாவூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி என்கிற கார்த்தி (29), மதகடிப்பட்டுபாளையம் ஜான்சன் (28), கஞ்சா விற்பவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்