திருப்பூர் பகுதிகளில் 2-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் ஊத்துக்குளியில் 18 மி.மீட்டர் மழை பதிவானது.
திருப்பூர் பகுதிகளில் 2வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் ஊத்துக்குளியில் 18 மி.மீட்டர் மழை பதிவானது.
திருப்பூர்,
திருப்பூர் பகுதிகளில் 2-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் ஊத்துக்குளியில் 18 மி.மீட்டர் மழை பதிவானது.
பலத்த மழை
திருப்பூர் மாவட்டத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக திருப்பூர் மற்றும் அனுப்பர்பாளையம், ஊத்துக்குளி என மாநகரின் அருகில் உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்து வந்தது. மதியம் திடீரென 2.30 மணிக்கு மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. 2-வது நாளாக பெய்த பலத்த மழையின் காரணமாக மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சாலைகளில் சென்றனர்.
பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
இதுபோல் குமரன்ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கல்லூரி சாலை அருகே உள்ள கல்லம்பாளையம் பாலத்தில் மழைநீர் அதிகளவு சென்றதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர். இதுபோல் அணைப்பாளையம் சோதனை சாவடி அருகே உள்ள மழைநீர் அதிகளவு தேங்கி நிற்கிறது.
ஏற்கனவே அந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. ஊத்துக்குளி, ஊத்துக்குளி ரயில் நிலையம், கொடியம்பாளையம் நால்ரோடு, பூசாரிபாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது
. சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்று உள்ளது. பல இடங்களில் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். ஊத்துக்குளி சுற்று வட்டார பகுதியில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் தங்கள் நிலங்களில் நிலக்கடலை பயிரிட விவசாய நிலங்களை தயார் படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 4 மி.மீ்ட்டர் மழையும், ஊத்துக்குளியில் 18 மி.மீட்டரும் என மாவட்டம் முழுவதும் 22 மி.மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி 1.38 மி.மீட்டர் ஆகும்.