கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 9 குழந்தைகளுக்கு நிதி உதவியை கலெக்டர் வினீத் வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 9 குழந்தைகளுக்கு நிதி உதவியை கலெக்டர் வினீத் வழங்கினார்.

Update: 2021-09-02 15:46 GMT
திருப்பூர்,
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 9 குழந்தைகளுக்கு நிதி உதவியை கலெக்டர் வினீத் வழங்கினார். 
பெற்றோர்களை இழந்த...
தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்தை குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி மற்றும் மேலும் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்திருந்தால் நிவாரண நிதி ரூ.3 லட்சம் வழங்கப்படும்.  மேலும், பெற்றோர்களை இழந்து உறவினர்களுடன் அல்லது பாதுகாவலர்களின் பாதுகாப்பில் வாழும் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 18 வயது முடியும் வரை பராமரிப்பு தொகை வழங்கவும், அரசு இல்லங்களில் முன்னுரிமை, கல்வி மற்றும் விடுதி செலவுகள் பட்டப்படிப்பு முடித்து வரும் வரையும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரூ.45 லட்சம் நிதி உதவி 
இதன் அடிப்படையில் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில்  கொரோனா தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம். கொரோனா தொற்றினால் பெற்றோர் ஒருவரை இழந்த 4 குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் தமிழக அரசு மூலம் நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. 
இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட கலெக்டர் வினீத் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த 9 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.45 லட்சம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் நன்னடத்தை அலுவலர் நித்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்