காஞ்சீபுர மண்டல ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொது வினியோக திட்ட பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த ரேஷன்கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2021-09-02 06:15 GMT
இதனை காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் கடை பணியாளர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செயல்படுத்தவும் கொரோனா பொது முடக்க காலத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் பணி சிறப்பானதாகவும் அமையப்பெற்றது. மக்களின் நேரடி தொடர்பில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் பணி மேலும் சிறப்பானதாக அமைய புத்தாக்க பயிற்சி பயனுள்ள வகையில் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு மேலாண்மை துணைப்பதிவாளர் உமாபதி, காஞ்சீபுரம் சரகம் துணைப்பதிவாளர் கே.மணி, கூட்டுறவு சார்பதிவாளர் கோகிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்