கர்நாடகத்தில் புதிதாக 1,159 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,159 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-01 20:15 GMT
பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 319 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,159 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 50 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.

  1,112 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 94 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது. 18 ஆயிரத்து 412 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 350 பேர், தட்சிண கன்னடாவில் 191 பேர், ஹாசனில் 81 பேர், மைசூருவில் 91 பேர், குடகில் 95 பேர், உடுப்பியில் 91 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 7 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும், ஹாசனில் 2 பேரும், உடுப்பியில் 3 பேரும் என மொத்தம் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்