சாவிலும் இணை பிரியாத தம்பதி; மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் சாவு

விக்கிரமசிங்கபுரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் இறந்தார்.

Update: 2021-09-01 19:56 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் இறந்தார்.

ஓய்வு பெற்ற மில் தொழிலாளி

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 78), ஓய்வு பெற்ற மில்தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (68). இத்தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முதலாவது மகள் சண்முகஜெயா, 3-வது மகள் கீதா ஆகியோர் கோவில்பட்டியிலும், 2-வது மகள் கலா தூத்துக்குடியிலும் வசித்து வருகின்றனர்.

மனைவி சாவு

இந்தநிலையில் சாமிநாதன் கடந்த சுமார் 8 ஆண்டு காலமாக உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை மனைவி ராமலட்சுமி உடனிருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமலட்சுமி திடீரென மாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து நேற்று மதியம் ராமலட்சுமி உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே மனைவி இறந்த துக்கம் தாங்காமல்  சாமிநாதனும் இறந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் இணை பிரியாத தம்பதியினர் இருவரது உடலும் ஒரே மேடையில் தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்