வாணியம்பாடி அருகே குட்கா மூட்டைகளை கடத்தி வந்த கார் போலீஸ் ஜீப் மீது மோதி தப்ப முயற்சி.

வாணியம்பாடி அருகே குட்கா மூட்டைகளை கடத்தி வந்த காரை நிறுத்துமாறு போலீசார் ைசகை காண்பித்தபோது, நிறுத்தாமல் டோல்கேட் தடுப்பு கம்பியை உடைத்துதள்ளிவிட்டு அங்கு நின்ற போலீஸ் ஜீப் மீது மோதி கார் தப்ப முயன்றது.

Update: 2021-09-01 19:07 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே குட்கா மூட்டைகளை கடத்தி வந்த காரை நிறுத்துமாறு போலீசார் ைசகை காண்பித்தபோது, நிறுத்தாமல் டோல்கேட் தடுப்பு கம்பியை உடைத்துதள்ளிவிட்டு அங்கு நின்ற போலீஸ் ஜீப் மீது மோதி கார் தப்ப முயன்றது. இதுதொடர்பாக 2 ேபர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் ஜீப் மீது மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாணியம்பாடி-நாட்டறம்பள்ளி ரோட்டில் நெக்குந்தி டோல்கேட் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். 

ஆனால் கார் நிற்காமல் டோல்கேட்டில் தடுப்பு கம்பியை உடைத்து கொண்டு ஓடி அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த போலீஸ் ஜீப் மீது மோதி விட்டு மீண்டும் நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றது. அதில் போலீஸ் ஜீப் சேதமடைந்தது. இதைப் பார்த்த போலீசார் மற்றொரு வாகனத்தில் காரை பின்தொடர்ந்து சென்று விரட்டி ஓரிடத்தில் மடக்கினர்.
 
2 பேர் ைகது

காரில் சோதனைச் செய்தபோது, அதில் 18 மூட்டைகளில் குட்கா பாக்கு பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். காரில் வந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் காட்பாடி கல்புதூர் பகுதியைச் சேர்ந்த பாபுலால் (வயது 30), வேலூர் சத்துவாச்சாரி பெரிய தெருவைச் சேர்ந்த யுவராஜ் (33) என்றும், பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்ததாக கூறினர்.
 
இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், குட்கா பாக்கு பாக்கெட்டுகள் பறிமுதல் ெசய்யப்பட்டன. அவர்கள் மீது வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, அம்பலூர் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்