கடையில் டெய்லர் மர்ம சாவு
முளகுமூட்டில் தையல் கடையில் டெய்லர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்:
முளகுமூட்டில் தையல் கடையில் டெய்லர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டெய்லர்
திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முளகுமூடு ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் கிளைமன்ஸ் (வயது59), டெய்லர். இவர் முளகுமூடு சந்திப்பில் தையல் கடை நடத்தி வந்தார். வேலை அதிகமாக இருக்கும் நாட்களில் இரவில் கடையில் தங்கி இருந்து வேலை பார்ப்பது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலையில் வெகு நேரமாகியும் கிளைமன்ஸ் வீட்டுக்கு வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கடைக்கு சென்று பார்த்தனர்.
பிணமாக கிடந்தார்
அப்போது, கடை ஷட்டரை திறந்து உள்ளே பார்த்த போது கிளைமன்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிணத்தின் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து டெய்லரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். கடையில் டெய்லர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.