சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது
கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
சாலை மறியல்
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானாவில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் கைது
தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அ.தி.மு.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், நகர செயலாளர்கள் வி.சி.கே.ஜெயராஜ், நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலமுருகன், கமலகண்ணன், கே.சி.எஸ். விவேகானந்தன் உள்பட 150-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் மனோகரா கார்னர் பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.