ஊட்டியில் சீல் வைத்த 7 கடைகளை திறக்க அனுமதி

ஊட்டியில் சீல் வைத்த 7 கடைகளை திறக்க அனுமதி

Update: 2021-08-31 17:05 GMT
ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி, நேற்று முன்தினம் அரசு விடுமுறை என்பதால் நிலுவை வாடகை வசூலிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் நேற்று கடைகளுக்கு உண்டான நிலுவைத் தொகையை செலுத்த வியாபாரிகள் முன்வந்தனர். அதன்படி நகராட்சி அலுவலகத்தில் 5 வியாபாரிகள் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தினர். 

மேலும் 2 பேர் 50 சதவீத நிலுவைத் தொகையை செலுத்தியதுடன், வருகிற 15 நாட்களுக்குள் மீதமுள்ள தொகையை செலுத்துவதாக ஒப்பந்த பத்திரத்தில் உறுதி அளித்தனர். அதன்பேரில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி 7 கடைகளை திறப்பதற்கான அனுமதி உத்தரவை வியாபாரிகளிடம் வழங்கினார். 

அப்போது நகராட்சி வருவாய் அலுவலர் பால்ராஜ் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட 7 கடைகளின் சீல் அகற்றப்பட்டது. நேற்று ஒரே நாளில் நிலுவை வாடகை ரூ.38 லட்சம் வசூலானது.

மேலும் செய்திகள்