தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்து வருகிறது. இதனால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 92 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.