கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிய அரசு ஊழியர்கள்
கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிய அரசு ஊழியர்கள்
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பிஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் நேற்று மத்திய அரசு வழங்கியது போல 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் 11 சதவீத அகவிலைப்படி உடனே வழங்கிட கோரி கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளகோவில் வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார் மாவட்ட துணைத்தலைவர் நல்ல சேனாபதி ஆகியோர் விளக்கஉரையாற்றினர். முடிவில் வட்டார பொருளாளர் முத்துச்செல்வம் நன்றி கூறினார்.