தேரியூர் காட்டுப்பகுதியில் மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது
மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் போலீசார் உடன்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேரியூர் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அந்த பகுதிக்கு போலீசார் சென்றபோது, காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், சாத்தான்குளம் செட்டியார் தெற்குத்தெருவைச் சேர்ந்த சண்முகம்வேலாயுதம் என்பதும், அவர் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்வதற்காக, மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.