1½ ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை- மதுரை வழித்தடத்தில் ரெயில் இயக்கம்- பயணிகள் உற்சாகம்

1½ ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை- மதுரை வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

Update: 2021-08-30 20:20 GMT
செங்கோட்டை:
கொரோனா ஊரடங்கில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அவ்வப்போது வழங்கப்பட்ட  தளர்வுகளில் படிப்படியாக போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது.
அதன்படி செங்கோட்டை- மதுரை இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரெயில் சுமார் 1½ ஆண்டுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த ரெயில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படுவதால் பயண கட்டணம் உயர்ந்து ரூ.75 வசூலிக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயில், காலை 10.25 மணிக்கு செங்கோட்டை வந்தது. பின்னர் மாலை 3.45 மணிக்கு செங்கோட்டையில் இருநது புறப்பட்டு மதுரைக்கு சென்றது. முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர்.
எனினும் செங்கோட்டை-மதுரை வழித்தடத்தில் முன்புபோல் பாசஞ்சர் ரெயிலாக இயக்க வேண்டும். காலை 6.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட ரெயில் சேவையையும் மீண்டும் தொடங்க வேண்டும். இதேபோன்று செங்கோட்டை- நெல்லை- திருச்செந்தூர் வழித்தடங்களிலும் மீண்டும் ரெயில்சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்