தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொட்டமடக்கிபட்டி, கோமாளிபட்டி, மடத்துபட்டி, விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, ஆத்தூர், சிவனண்டிபட்டி மற்றும் ஏழாயிரம் பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் இந்த மருத்துவ முகாமில் பணியாற்றினர்.