கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Update: 2021-08-30 18:22 GMT

நாமக்கல்:
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் கிருஷ்ணர், பாமா, ருக்மணிக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் கோ பூஜை நடந்தது.
பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையோரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி சாமிக்கு பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகாதீபாராதனையும் நடந்தது. 
பக்தர்கள் தரிசனம்
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு காலை முதலே பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்