காலாவதி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை
காலாவதி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் துரை கண்ணம்மாள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தேர்வு செய்யும் விதை நெல் தரமானதாக இருக்க வேண்டும். போலி தரமற்ற விதைகள் இல்லாத மற்றும் சான்று அட்டைகள் இன்றி மூடைகளில் வைத்து விற்கப்படும் விதைகளை வாங்கக் கூடாது. விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகளுக்கு கட்டாயம் சான்று பெற வேண்டும். தங்கள் வசம் உள்ள விதைகளை விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து முளைப்புத்திறன் பரிசோதனை செய்த பிறகே விதைக்கலாம். இதை விற்பனையாளர் கவனத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட விதை விற்பனையாளர்கள் விதை குவியல்களை இடை வெளிவிட்டு ரகம் வாரியாக பிரித்து வைக்க வேண்டும். விதை இருப்பு வினியோக பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும். விற்கப்படும் விதைகள் பயிர், ரகம் மற்றும் காலாவதி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய ரசீது விவசாயி களுக்கு வழங்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் காலாவதி விதைகளை விற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.