குடிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் பலியானார்.
குடிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் பலியானார்.
குடிமங்கலம்,
குடிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்
தாராபுரம் அருகே உள்ள நாரணா புரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் பழனிச்சாமி (வயது 47). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பழனிச்சாமி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தாராபுரத்தில் இருந்து திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்காக குடிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருப்பூர்-உடுமலை ரோட்டில் குடிமங்கலத்தில் உள்ள தனியார் எனஜினீயரிங் ஒர்க்ஸ் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவை இருகூரிலிருந்து இருந்து பழனி கோவிலுக்கு செல்வதற்காக கார் உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், பழனிச்சாமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிச்சாமி உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காரை ஓட்டி வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் அருணாச்சலபாண்டியன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.