பெர்சிமோன் பழ சீசன் தொடங்கியது

பெர்சிமோன் பழ சீசன் தொடங்கியது

Update: 2021-08-30 08:36 GMT
குன்னூர்

குன்னூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் பல்வேறு பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு சீசனுக்கு ஏற்றவாறு பழங்கள் அறுவடை நடைபெறும். அதன்படி தற்போது பெர்சிமோன் பழ சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமோன் பழங்கள் விற்பனைக்கு அதிகளவில் வந்து உள்ளன. இதுகுறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் டாக்டர் பெபிதா கூறியதாவது:-

கடந்த 1952-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பெர்சிமோன் பழ நாற்று கொண்டு வரப்பட்டு, குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. இதனை ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைப்பார்கள். ஏனெனில் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் தேசிய பழம் ஆகும். இதனை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றன. 

மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படும் இந்த பழமானது கண் பார்வை குறைபாடு, மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றை தீர்க்க உகந்தது என கூறப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது தவிர வைட்டமின்-சி சத்து அதிகளவில் உள்ளது. இந்த பழம் குன்னூர் பழவியல் நிலையத்தில் கிலோவுக்கு ரூ.170 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்