நல்லம்பள்ளி அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
நல்லம்பள்ளி அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார்.
பெண் ஊழியர்
நல்லம்பள்ளி அருகே ராஜாகொல்லஅள்ளியை சேர்ந்த காவேரியப்பன். இவரது மகள் ஞானமொழி (வயது 29). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக ஞானமொழி தனது சொந்த ஊருக்கு வந்தார்.
வீட்டில் தனியாக இருந்த ஞானமொழி நேற்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஞானமொழி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் ஞானமொழி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.