சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு

Update: 2021-08-29 12:51 GMT
தாராபுரம், ஆக.30-
திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தாராபுரம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு
தாராபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமை தாங்கினார். அப்போது மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் பேசும்போது  பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் அறிவிப்பு குறுஞ்செய்திகளை நம்ப கூடாது.அதில் சில சமயம் உங்கள் வங்கி கணக்கு எண், பின் நம்பர், மற்றும் வங்கி விபரங்களை யாராவது கேட்டால் சொல்லக்கூடாது. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், புதிய இணையதள cybercrime.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்றார்.
பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்