குமரியில் இன்று 46 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று 46 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 46 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. அதன்படி குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 46 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆன்லைன் டோக்கன் முைறயிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இருதய நோய், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு நேரடி டோக்கன் முறையிலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, கோட்டார் கவிமணி பள்ளி ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு தடுப்பூசி நேரடி டோக்கன் மூலம் போடப்படும். கணபதிபுரம், கிருஷ்ணன்கோவில், வடசேரி, வட்டவிளை, வடிவீஸ்வரம், தொல்லவிளை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு நேரடி டோக்கன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.
அரசு ஆஸ்பத்திரிகள்
ஆசாரிபள்ளம், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், இறச்சகுளம், பீமநேரி ஆகிய பகுதிகளில் உள்ள மினிகிளினிக், தடிக்காரன்கோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கரையன்குழி சகாயபுரம் என்.எம்.சி., மற்றும் நாகர்கோவிலில் அருகுவிளை ஐ.சி.டி.எஸ்., காந்திபுரம் மினிகிளினிக், வட்டக்கரை ஐ.சி.டி.எஸ்., சின்னவண்ணான்விளை ஐ.சி.டி.எஸ்., கட்டான்விளை ஐ.சி.டி.எஸ். ஆகியவற்றில் அனைத்து வயதினர் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோயாளிகள் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நேரடி டோக்கன் முறையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.
கோவேக்சின் தடுப்பூசி
ஆசாாிபள்ளம், பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி, பீமநேரி மினிகிளினிக், வடிவீஸ்வரம், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், இடைகோடு, பத்மநாபபுரம், குழித்துறை, முட்டம், ஆறுதேசம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரடி டோக்கன் முறையில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.