ஈரோட்டில் மினி மாரத்தான்
ஈரோட்டில் மினி மாரத்தான் கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி, வலிமையான இந்தியா என்ற பெயரில் மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இந்த மாரத்தான் போட்டியை, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் முன்னிலை வகித்தார்.
வ.உ.சி. பூங்கா மைதான வளாகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக மீண்டும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நிறைவடைந்தது. முன்னதாக சுதந்திர தின உறுதிமொழியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ் மற்றும் மாணவ -மாணவிகள் பலர் கலந்து கொண்டார்கள்.