மரத்தில் ேமாட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

சாத்தூர் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-28 19:16 GMT
சாத்தூர், 
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தடியம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது30). இவருடைய மனைவி செந்தூரப்பிரியா (27). இவர்களது மகள்  மதுபாலா (5), மகன் சூரிய பிரகாஷ் (7). இந்த நிலையில் நேற்று சிவகாசி அருகே உள்ள மயிலாடுதுறைக்கு தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. சிவகாசி செல்லும் சாலையில் மேட்டமலை அருகே சென்றபோது நிலைதடுமாறியதில் சாலையோர உள்ள மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.  இதில் செல்லத்துரை தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி மதுபாலா படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதில் செந்தூரப் பிரியா, சூரியபிரகாஷ் ஆகியோர் காயமுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்