ஆம்பூர் அருகே; மோட்டார் சைக்கிள் திருடன் கைது
ஆம்பூர் அருகே நடந்த வாகன சோதனையில் மோட்டார்சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து 10 வாகனங்கள் மீட்கப்பட்டன.
ஆம்பூர்
ஆம்பூர் அருேக நடந்த வாகன சோதனையில் மோட்டார்சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து 10 வாகனங்கள் மீட்கப்பட்டன.
மோட்டார்சைக்கிள் மீட்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 41). இவர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை மர்மநபர் திருடிச்சென்று விட்டார். இதுகுறித்து வேலு உமராபாத் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவலாபுரம் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்த ஷமில் (வயது 27) என்பதும் உமராபாத் பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்களும், ஆம்பூர் டவுன் போலீஸ் எல்லையில் 4 மோட்டார் சைக்கிள்களும், தாலுகா போலீஸ் எல்லையில் 2 மோட்டார் சைக்கிள்களும் மொத்தம் 10 மோட்டார் சைக்கிள்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மீட்டனர்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷமிலை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த 10 மோட்டார் சைக்கிளை மீட்டு இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.