விவசாய நிலங்களில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு

விவசாய நிலங்களில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு

Update: 2021-08-28 16:34 GMT
நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்டது மெட்டுவாவி கிராமம். இங்கு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்துறை, புள்ளியியல் துறை அதிகாரிகள், விவசாய நிலங்களில் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.

 இதில், மானாவாரி நிலத்தில், சோளம், கம்பு, தட்டைபயறு, கொள்ளு ஆகியன சாகுபடி குறித்தும், சாகுபடி பரப்பளவு குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது.
அதபோல, நீர் பாசன பரப்பில், காய்கறிகள் சாகுபடி பரப்பளவு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும், வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்கள் குறித்தும், தனித்தனியாக புல வரிசை எண்படி, கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், கிணத்துக்கடவு வட்டார வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம், துணை தாசில்தார் சிவகுமார், தோட்டக்கலைத்துறை அலுவலர் சுமதி, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்