ஓசூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

ஓசூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.

Update: 2021-08-28 16:21 GMT

ஓசூர்:
ஓசூர் சாந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குமார். எலக்ட்ரிக்கல் காண்டிராக்டர். இவருடைய வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்தது வருகிறது. இதையொட்டி அங்கு நேற்று எலக்ட்ரிக்கல் பணிகள் நடந்தன. அப்போது மின்சாரம் தாக்கியதில் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வீரண்ணா (வயது 32) என்பவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி பலியான வீரண்ணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்