16 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

16 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2021-08-28 14:52 GMT
துடியலூர் 

கோவையை அடுத்த கணுவாயில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் வழியில் காளையனூர் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் செந்தில்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

 அப்போது சாலையின் நடுவில் 16 அடி நீள  மலைபாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த தகவலின் பேரில் கோவை வனத்துறையினர் விரைந்து வந்தனர். 

அவர்கள், அந்த மலைப்பாம்பை  லாவகமாக பிடித்து ஆனைக்கட்டியில் அடர்ந்த வனபகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். 

அந்த மலைப்பாம்பு அதிக அளவு இரை சாப்பிட்டு இருந்ததால் வேகமாக செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்