எலத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஆய்வு
எலத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
இதனை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘‘விவசாயிகள் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து அன்றே நெல் நிலையங்களுக்கு சென்று நெல் மூட்டைகளை எடை போட்டு விற்பனை செய்யலாம்.
எலத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை 7 டன் வரை நெல் கொள்முதல் செய்யும் வசதி இருந்தது.
இதனை மாற்றி 15 டன் நெல் கொள்முதல் செய்ய போதுமான வசதிகள் விரைவில் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மேலும் ஒரு நபர் நான்கு முறை மட்டும் தான் பதிவு செய்ய வேண்டும் அதற்கு மேல் பதிவு செய்தால் அவர்கள் பதிவை நிராகரிக்கப்படும். என்றார்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தாசில்தார் ஆர்.ஜெகதீசன், ஒன்றியக் குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், பி.டி.ஓ லட்சுமி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.