வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Update: 2021-08-28 12:26 GMT
இந்தநிலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் கன்வேயர் பெல்ட் வழியாக நிலக்கரியை கொண்டு வந்து சேமிப்பு கிடங்கில் சேமித்து நாள் தோறும் நிலக்கரியை துகள்களாக மாற்றி கொதிகலனுக்கு அனுப்பிய பின்னர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின் உற்பத்தி தொடங்கியதும் எரிந்து உள்ள கழிவுப்பொருள் உலர்சாம்பலாகவும் குளிரூட்டப்பட்ட நீரால் சாம்பல் கலந்து சாம்பல் குளத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் சாம்பல் வெளிவரும் பிரிவில் 30 அடி உயரத்தில் இருக்கும் இ.எஸ்.டி. பிரிவு எனப்படும் இடத்தில் ராட்சத குழாய்கள் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. 2-வது யூனிட் முதல் அலகின் தொழில் நுட்ப பிரிவில் ஏற்பட்ட கோளாறால் சாம்பல் கழிவுகள் தேங்கும் நிலையால் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்