திருவொற்றியூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ராதை தலைமையில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-08-28 09:05 GMT
போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சான்றுடையோருக்கு, வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், கொரோனா கால பேரிடர் நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் அதேபோல் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர். உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தக் கோரி மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டம். நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக நேற்று தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளிகள் மண்டல தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்