சேலம் மாவட்டத்தில் புதிதாக 67 பேருக்கு தொற்று:கொரோனாவில் இருந்து 110 பேர் குணமடைந்தனர்
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து 110 பேர் குணமடைந்தனர்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 65 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 21 பேர், வீரபாண்டியில் 10 பேர், ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம் பகுதியில் தலா 6 பேர், நங்கவள்ளியில் 4 பேர், கொங்கணாபுரம், நரசிங்கபுரம் நகராட்சியில் தலா 3 பேர், எடப்பாடி, சேலம் ஒன்றியம், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தலா 2 பேர் வீதம் மொத்தம் 67 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 110 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம் கொரோனா நோய் தொற்றுக்கு 994 பேர் மட்டும் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.