ஊஞ்சலூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை; கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபருக்கு வலைவீச்சு
ஊஞ்சலூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.
ஊஞ்சலூர்

கேமராவில் சிக்கிய...
ஊஞ்சலூர் அருகே உள்ள கணபதிபாளையம் நால்ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 42). இவர் அந்த பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 9 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறு நாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.14,000-ஐ காணவில்லை. கடையை பூட்டி விட்டு சென்றதும். அங்கு வந்த மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளது.
வலைவீச்சு
இதேபோல் அருகில் இருந்த திருநாவுக்கரசு என்பவரின் ஜெராக்ஸ் கடையின் பூட்டையும் மர்ம நபர் உடைத்து அங்கு இருந்த ரூ.2,400-யை திருடி உள்ளார். தொடர்ந்து அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கு பணம் எதுவும் இல்லாததால் எதையும் எடுக்காமல் சென்று விட்டான். இது குறித்து ராஜசேகர், திருநாவுக்கரசு ஆகியோர் கொடுமுடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை வலை வீசி தேடிவருகிறார்கள்.
அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.