சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தம்; 4 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து செல்வதால் பயணிகள் அவதி
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அடர்ந்த வனப்பகுதி வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பொதுமக்கள் செல்கின்றனர்.
தாளவாடி

தளர்வுகள்
கொரோனா 2-வது அலை காரணமாக நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழக- கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 23-ந்தேதி முதல் போக்குவரத்துக்கு இரு மாநில அரசுகளும் அனுமதி அளித்தது.
அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி, திம்பம், ஆசனூர், புளிஞ்சூர் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர், மைசூரு, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து தொடங்கியது. அதேபோல் கேர்மாளம் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள உடையார்பாளையம், கொள்ளேகால், மைசூரு செல்லும் மற்றொரு வழியிலும் பொதுப் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
சோதனைச்சாவடி
இந்த நிலையில் நேற்று காலை முதல், திடீரென சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் பஸ்கள், தமிழக எல்லைப் பகுதியான கேர்மாளம் சோதனைச்சாவடி அருகே நிறுத்தப்பட்டது. கர்நாடக எல்லையில் உள்ள அர்த்தநாரிபுரம் கிராமத்தில் கர்நாடக அரசின் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக வரும் தமிழக பயணிகளை கொரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே, கர்நாடக மாநிலத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
விலங்குகள் நடமாட்டம்
மேலும் தமிழகத்தில் இருந்து வரும் பஸ்களை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, திரும்பிச் சென்றுவிட வேண்டும் என பஸ் டிரைவர்களை கர்நாடக மாநில போலீசார் எச்சரித்துள்ளனர். கேர்மாளம் சோதனைச்சாவடி அருகே தமிழக வாகனங்கள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் கர்நாடக மாநில போலீசார் கூறி உள்ளனர். இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ்சில் செல்வோர் 4 கிலோ மீட்டர் முன்பாகவே இறக்கி விடப்படுகிறார்கள். விலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதியில் அச்சத்துடன் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சோதனைச்சாவடியை பொதுமக்கள் அடைகின்றனர்.
அதிர்ச்சி
ஆனால் கொரோனா பரிசோதனை செய்திருந்து, அதற்குண்டான சான்றுகள் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். நாங்கள் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளோம் எங்களை அனுமதியுங்கள் என கேட்ட பொதுமக்களை விரட்டி அனுப்புவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி பயணிகளை 4 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து, பரிசோதனை சான்றுகளை காண்பித்தால் மட்டுமே கர்நாடக எல்லைக்குள் அனுமதிப்போம் என திடீரென கர்நாடக அரசு அறிவித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.