நெல்லையில் புதிய மின்மாற்றி திறப்பு
நெல்லையில் புதிய மின்மாற்றி திறப்பு விழா நடந்தது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு உபகோட்டம் மகாராஜ நகர் பிரிவிற்கு உட்பட்ட தியாகராஜ நகர் 15-வது தெரு பகுதியில் ஏற்கனவே இருந்த மின்மாற்றியின் குறைந்தழுத்த மின்பளுவை அதிகரிப்பதற்காக புதிதாக ரூ.7 லட்சத்து 44 ஆயிரம் செலவில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தலைமை பொறியாளர் செல்வகுமார், மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், புதைவட உதவி செயற்பொறியாளர் சங்கர், மகாராஜ நகர் உதவி பொறியாளர் வெங்கடேஷ், கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளர் ஜன்னத்துல் சிபாயா மற்றும் மின்வாரிய பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.