உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் பயிற்சி

உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் பயிற்சி

Update: 2021-08-27 18:15 GMT
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடி, சொக்கலிங்கம்புரம், புதூர் உள்ளிட்ட 15 இடங்களில் இடங்களில் சுகாதார பணியாளர்கள் மற்றும் கள அலுவலர்களுக்கான உணவு பொருட்கள் தரம் மற்றும் கலப்படத்தை கண்டறிதல் குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் தினந்தோறும் சாப்பிடும் உணவு பொருட்களில் கலக்கப்படும் கலப்படம் குறித்த பயிற்சியும், அவற்றை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி தலைமை தாங்கினார். தேவகோட்டை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வேல்முருகன், காரைக்குடி உணவு பாதுகாப்பு துறை உதவியாளர் கருப்பையா மற்றும் ஏ.சி.எம். மருத்துவ சிறப்பு அதிகாரி மகாதேவன், மருத்துவ திட்ட வளர்ச்சி அதிகாரி வில்வலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்