பழுதடைந்த கட்டிடங்களை சரிசெய்ய கோரிக்கை

பழுதடைந்த கட்டிடங்களை சரிசெய்ய கோரிக்கை

Update: 2021-08-27 16:59 GMT
ஊட்டி

ஊட்டி மத்திய பஸ் நிலையம் சேரிங்கிராஸ் பகுதியில் போக்கு வரத்துகழகத்துக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இங்கு கோட்ட மேலாளர், கிளை மேலாளர் தங்கும் விடுதியாக இயங்கி வந்தது. 

கடந்த 2009-ம் ஆண்டு பெய்த மழை காரணமாக மண் திட்டு இடிந்து விழுந்ததால் கட்டிடங்கள் பழுதானது. ஆனால் இந்த கட்டிடங்கள் இதுவரை சரிசெய்யவில்லை. அத்துடன் அங்கு யாரும் தங்குவதும் இல்லை. இதனால் அங்கு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 

இதை சரிசெய்தாலோ, அல்லது இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டினால் போக்குவரத்து கழகத்துக்கு வருமானமும் கிடைக்கும். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்