கொடைக்கானலில் கனமழை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
கொடைக்கானலில் பெய்த கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு நேற்று மாலை ஆனந்தகிரி 4-வது தெருவில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் எதிரில் உள்ள சாலமன் என்பவருடைய வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அந்த வீட்டில் வசித்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி உறவினர் வீட்டில் சென்று தங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.