சாயும் நிலையில் மின்கம்பங்கள்

சத்திரக்குடி பகுதியில் சாயும் நிலையில் மின்கம்பங்கள் உள்ளன.

Update: 2021-08-27 12:46 GMT
போகலூர், 
போகலூர் ஒன்றியம் சத்திரக்குடியை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சத்திரக்குடி ெரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளன. இவை அனைத்தும் சாலையின் ஓரம் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் அருகிலேயே உள்ளதால் அங்கு வரும் மக்கள் அச்சத்திலேயே செல்கின்றனர். இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்