சிறுமியின் ஆபாச வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் என மிரட்டிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியின் ஆபாச வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் என மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-26 21:06 GMT
பெருந்துறை
சிறுமியின் ஆபாச வீடிேயாவை முகநூலில் வெளியிடுவேன் என மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அடிக்கடி செல்போனில்...
பெருந்துறை பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்த தொழிலாளி தனது குடும்பத்தினருடன் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது அதேபகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் ராஜ்கமல் (வயது 20) என்பவருடன் 15 வயது சிறுமி எதார்த்தமாக பேசி உள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமி தன்னுடைய செல்போன் எண்ணை, ராஜ்கமலுக்கு கொடுத்து உள்ளார். இதையடுத்து 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளனர். 
வீடியோ
இதைப்பயன்படுத்தி அந்த சிறுமியின் உடலை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என ராஜ்கமல் நைசாக கூறி உள்ளார். அவரின் நயவஞ்சக எண்ணத்தை அறியாத சிறுமி, தான் குளியல் அறையில் நிர்வாணமாக குளித்து கொண்டிருக்கும் போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வீடிேயாவை ராஜ்கமலுக்கு வாட்ஸ் அப்பில் சிறுமி அனுப்பி உள்ளாள். 
கடந்த 8 மாதங்களாக சிறுமியின் நிர்வாண வீடியோவை ராஜ்கமல் பார்த்து ரசித்து உள்ளார். பின்னர் கடந்த 22-ந் தேதி அந்த சிறுமியை தொடர்பு கொண்ட ராஜ்கமல் மீண்டும் புதிதாக வேெறாரு நிர்வாண வீடியோவை அனுப்பி வை என கூறியதாக தெரிகிறது. 
கைது
ஆனால் அதற்கு சிறுமி மறுத்து உள்ளாள். புதிய நிர்வாண வீடியோவை அனுப்பாவிட்டால், பழைய நிர்வாண வீடியோவை முகநூலில் பதிவிடுவேன் என சிறுமியிடம் ராஜ்கமல் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டதும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
 இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ராஜ்கமலை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்