குமரியில் இன்று 55 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று 55 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 55 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 55 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், ஆறுதேசம், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும். இந்த முகாம்களில் ஆன்லைனில் டோக்கன் வழங்கப்படுகிறது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, கோட்டார் கவிமணி பள்ளி ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு தடுப்பூசி நேரடி டோக்கன் மூலம் போடப்படும். கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, கிருஷ்ணன்கோவில், வடசேரி, வட்டவிளை, வடிவீஸ்வரம், தொல்லவிளை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நேரடி டோக்கன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.
அனைத்து வயதினருக்கும்...
ஆசாரிபள்ளம், பூதப்பாண்டி, குளச்சல், சேனம்விளை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, குலசேகரன்புதூர் ஆசிரியர் பயிற்சி மையம், மணவிளை என்.எம்.சி., கணபதிபுரம் அரசு தொடக்கப்பள்ளி, முக்கலம்பாடு ஆர்.சி. தொடக்கப்பள்ளி, முரசன்கோடு புனித மேரீஸ் தொடக்கப்பள்ளி, வெங்கஞ்சி ஆர்.டி.எல்.எம்.எஸ். பள்ளி, நித்திரவிளை அரசு நடுநிலைப்பள்ளி, மேல்புறம் அரசு மேல்நிலைப்பள்ளி, வன்னியூர் அரசு நடுநிலைப்பள்ளி, ஆணக்கரை லிட்டில் பிளவர் நடுநிலைப்பள்ளி, திருந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளி, பண்டாரவிளை புனித தெரசா நடுநிலைப்பள்ளி மற்றும் நாகர்கோவிலில் ஸ்காட் மேல்நிலைப்பள்ளி, பெருவிைள அரசு மேல்நிலைப்பள்ளி, ஐ.சி.டி.எஸ். வாட்டர் டேங்க் ரோடு, குமரி மெட்ரிக் பள்ளி, வாத்தியார்விளை ஐ.சி.டி.எஸ்., வடசேரி அரசு தொடக்கப்பள்ளி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, லிட்டில் பிளவர் தொடக்கப்பள்ளி, கண்ணன்குளம் ஐ.சி.டி.எஸ்., இளங்கடை அரசு தொடக்கப்பள்ளி, கீழ் மறவன்குடியிருப்பு அரசு நடுநிலைப்பள்ளி, பூச்சிவிளாகம் அரசு நடுநிலைப்பள்ளி, மேல ஆசாரிபள்ளம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி டோக்கன் முறையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, அரசமூடு அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் நேரடி டோக்கன் முறையில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.