ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
வில்லுக்குறி அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
வில்லுக்குறி அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆட்டோ டிரைவர்
இரணியல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வில்லுக்குறியை அடுத்த மணக்காவிளையை சேர்ந்தவர் பாலையன் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பாலையனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ராஜேஸ்வரி கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனாலும், பாலையன் கள்ளக்காதலை கைவிடாததால் மனமுடைந்த ராஜேஸ்வரி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பாலையனை அழைத்து அறிவுரை கூறி எச்சரித்து எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து அந்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்தி இருந்தார்.
நேற்று முன்தினம் காலை பாலையன் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ராஜேஸ்வரி, கணவரை கண்டித்தார். பின்னர், இதுபற்றி மீண்டும் இரணியல் போலீசில் புகார் செய்து விட்டு குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ேமலும், இதுபற்றி விசாரிப்பதற்காக போலீசார் பாலையனை போனில் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பாலையனை பார்க்க அவருடைய சகோதரர் தினேஷ் வந்தார். கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவு திறக்காததால், அதை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு, பாலையன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் பாலையன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர், இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.